அன்புடன் அமைந்த வாழ்க்கை
என்பது உலகில்
இன்புற்றவர் அடையும் சிறப்பு-----பாமரன் பொருள்
அன்புற்று அமர்ந்த வழக்கு
என்ப வையத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு----குறள் 75
எலும்பில்லா புழுவை வெயில் வாட்டுவது போல
அன்பில்லாதவர்களை அறம் வாட்டும்----பாமரன் பொருள்
என்பில் அதனை வெயில்போலக் காயுமே
அன்பில் அதனை அறம்------குறள் 77
உள்ளன்பு இல்லாது
உயிர்வாழ்வது பாலைவனத்தில்
காய்ந்த மரம்துளிர்ப்பது
போன்றது----பாமரன் பொருள்
அன்பகத்து இல்லா
உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம் தளிர்த்தற்று-----குறள் 78
உடலுறுப்புகள் எல்லாம்
என்னசெய்யும்
உள்ளத்தில் அன்பு
இல்லாதவருக்கு------பாமரன் பொருள்
புறத்துறுப்பு எல்லாம் எவன்
செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பில வர்க்கு------குறள் 79
அன்பின் வழி செல்லும் உயிர்
அவ்வாறில்லாதவர்க்கு
எலும்புதோல் போர்த்திய
உடம்பு-----பாமரன் பொருள்
அன்பின் வழியது உயிர் நிலை
அஃதில்லார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு-----குறள் 80
4 கருத்துகள்:
அன்பைப் பற்றிய அழகிய குறள்கள்.. விளக்கங்களோசு சூப்பர்.
athira said...
''அன்பைப் பற்றிய அழகிய குறள்கள்.. விளக்கங்களோ சூப்பர்.''
உங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி.
அன்போடு வாழவேண்டும்
அழகான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..
இராஜராஜேஸ்வரி said...
//"அன்போடு வாழவேண்டும்"
அழகான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்//
தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.