சரியான நேரத்தில் செய்யும் உதவி
ஒருவர் ஒரு உதவி வேண்டும் என்று கேட்கிறார் என்றால் அதை உடனடியாக செய்யவேண்டும் “நாளை செய்கிறேன்” “பிறகு பார்க்கலாம்” என்று தள்ளிப் போடக்கூடாது. சரியான நேரத்தில் அவ்வுதவி கிடைக்கவில்லை என்றால் அதனால் அவருக்கு பல துன்பங்கள் நேரலாம். தாமதமாக செய்யப்படும் உதவி பயன் இல்லாமலே கூட போய்விடலாம். எனவே தேவையான நேரத்தில் அவ்வுதவி கிடைக்குமென்றால் மிக மிக பயன் தருவதாக இருக்கும். அதனால்தான் சரியான நேரத்தில் செய்யும் உதவியை உலகத்தைவிட பெரிதாக இருக்கும் என்று கூறுகிறார் திருவள்ளுவர்
(தேவயான) நேரத்தில் செய்த உதவி சிறிதெனினும்
உலகத்தைவிட மிகப் பெரியது.
பாமரன் குறள்
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது குறள் 102
10 கருத்துகள்:
given in time even a trifling help
exceeds the earth
தொடர்ந்து எழுதுங்க, தினம் ஒரு குறளனா சந்தோஷமே
உதவி செய்தால் செய்தவருக்கும் அது கூடுதல் மகிழ்ச்சி.
suryajeeva said...
தொடர்ந்து எழுதுங்க, தினம் ஒரு குறளனா சந்தோஷமே//
உங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி
ரிஷபன் said...
//உதவி செய்தால் செய்தவருக்கும் அது கூடுதல் மகிழ்ச்சி//
உண்மை.. உதவி செய்தவருக்கும் பெற்றவருக்கும் மகிழ்வைத் தரும் நன்றி உங்கள் வருகைக்கும் பதிவிற்கும்
Nice blog and nice thoughts... Keep writing
Shanthi said...
//Nice blog and nice thoughts... Keep writing//
தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி
சரியான நேரத்தில் அவ்வுதவி கிடைக்கவில்லை என்றால் அதனால் அவருக்கு பல துன்பங்கள் நேரலாம்./
சரியான அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்..
இராஜராஜேஸ்வரி said...
சரியான நேரத்தில் அவ்வுதவி கிடைக்கவில்லை என்றால் அதனால் அவருக்கு பல துன்பங்கள் நேரலாம்./
"சரியான அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்"
வருகைக்கும், பதிவிற்கும் நன்றி.
இயற்கையைப் பார்த்து மனிதன் கற்றுக் கொள்ள
வேண்டிய விஷயங்களில்
இந்த உதவியும் ஒன்று. நன்று.
ஸ்ரவாணி said...
//இயற்கையைப் பார்த்து மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்களில் இந்த உதவியும் ஒன்று//
மிகச்சரியாக சொல்லியிருக்கிறீர்கள். வருகைக்கு நன்றி
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.