ஒருவருக்கு ஒரு உதவி தேவை. மற்றவர் அந்த உதவியை அவருக்குச் செய்து தருகிறார். அந்த உதவியைச் செய்lதவர் “நான் என்ன பெரிதாகச் செய்துவிட்டேன் என்னால் முடிந்ததைத்தானே செய்தேன்” என்று சொல்வார். ஆனால் அந்த உதவியைப் பெற்றவருக்குத்தான் தெரியும் அந்த உதவியானால் அவர் அடையக்கூடிய பலன். அந்த உதவியின் பலனை நன்கு அறிந்தவர் அவ்வுதவியைச் சிறியதாகக் கருதமாட்டார். அப்படி உதவியின் பலனை நன்கு அறிந்தவர் செய்யப்பட்ட உதவி சிறியதாக இருந்தாலும், அதனைப் பனைமரமளவு பெரியதாகவே நினைப்பார்.
தினையளவே உதவி செய்தாலும் பனைமர அளவாகக்
கருதுவார் அதன் பலன் தெரிந்தவர்.
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார் குறள் 104