பொருட்பால்
அரசியல்
அதிகாரம் : சிற்றினஞ்சேராமை
குறள் 356 முதல் 360 வரை
மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை.  
குறள் # 456
மனந்தூய்மையானவர்க்கு எஞ்சுவது புகழ்போன்ற நன்மை
இனந்தூய்மையானவர்க்கு
நன்றாகாத செயல் ஏதும் இல்லை        பாமரன் பொருள்
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.   குறள் # 457
மனநலம் உயிர்களுக்கு மேன்மையாகும் இனநலம்
எல்லாப் புகழையும் தரும்.      பாமரன் பொருள்
மனநலம் நன்குடைய ராயினும்
சான்றோர்க்கு      
இனநலம் ஏமாப் புடைத்து.  குறள் # 458
மனநலம் நன்றாக அமையப்பெற்றவராயினும்
சான்றோருக்கு
இனத்தின் நன்மை பாதுகாப்பாக அமையும்.      பாமரன் பொருள்
மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும் 
இனநலத்தின் ஏமாப் புடைத்து  குறள் # 459
மனத்தின் நன்மையால் மறுமை இன்பமுடையதாகும்
அதுவும் 
இனநலத்தால் மேலும் சிறப்புடையதாகும்        பாமரன் பொருள்
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்     குறள் # 460
நல்லஇனத்தைவிட சிறந்த துணையுமில்லை.தீய இனத்தைவிட
துன்பம் தரும்பகையும் இல்லை          பாமரன் பொருள்
. 






