செவ்வாய், 12 நவம்பர், 2013

நன்மைதராத செயல் செய்வதை விரும்பாதீர்

பொருட்பால், அரசியல்.
அதிகாரம்; குற்றங்கடிதல்
குறள் 436 முதல் 440 வரை
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.        குறள் # 436
தனதுகுற்றத்தை நீக்கி பிறரது குற்றத்தைக் காணமுற்பட்டால்
என்ன குற்றம் நேரும் தலைவனுக்கு.     பாமரன் குறள்

செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.         குறள் # 437
செய்ய வேண்டியவற்றை செய்யாத கருமியின் செல்வம்
பயன் ஏதுமின்றி வீணாகும்.     பாமரன் பொருள்.

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப்படுவதொன் றன்று.      குறள்  # 438.
கருமித்தனத்தால் கொடுக்காத த்ன்மை எல்லாகுற்றங்களுள்ளும்
ஒன்றாக எண்ணப்படக்கூடியதல்ல. (மிக மோசமானது).   பாமரன் பொருள்.
.
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.     குறள் # 439
எப்பொழுதும் தன்னைத்தான் வியந்துபேசாதீர், விரும்பாதீர்
நன்மைதராத செயல் செய்வதை.    பாமரன் பொருள்.

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.        குறள் # 440
விரும்பியவற்றை பிறர் அறியாமல் நிறைவேற்றினால்

பலிக்காது பகைவரின் சூழ்ச்சிகள்.     பாமரன் பொருள்.

10 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

விரும்பியவற்றை பிறர் அறியாமல் நிறைவேற்றினால்

பலிக்காது பகைவரின் சூழ்ச்சிகள்.

ரகசியம் காப்பதன் பெருமைகள் பற்றி அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

Viyapathy சொன்னது…

இராஜராஜேஸ்வரி said...
.//ரகசியம் காப்பதன் பெருமைகள் பற்றி அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..//

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.

ராஜி சொன்னது…

எளிமையான விளக்கம்

Avainayagan சொன்னது…

ராஜி said...
.//எளிமையான விளக்கம்//
தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

ஐந்து குறள்களும் அதற்கான விளக்கங்களும் அருமை. பாராட்டுக்கள்.

இளமதி சொன்னது…

அரும்பொருள் தன்னை அழகுறத் தந்தீர்
பெரும்பலன் காண்பது பேறு!

அத்தனையும் எப்பொழுதும் எம்முடன் உணர்ந்திருக்க வேண்டியவை!
இலகுவான நல்ல விளக்கம் தந்தீர்கள் ஐயா!

வாழ்த்துக்கள்!

avainaayagan சொன்னது…

வை.கோபாலகிருஷ்ணன் said...
//ஐந்து குறள்களும் அதற்கான விளக்கங்களும் அருமை. பாராட்டுக்கள்//

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி ஐயா.

Avainayagan சொன்னது…

இளமதி said...
"அரும்பொருள் தன்னை அழகுறத் தந்தீர்
பெரும்பலன் காண்பது பேறு!"

அத்தனையும் எப்பொழுதும் எம்முடன் உணர்ந்திருக்க வேண்டியவை!
இலகுவான நல்ல விளக்கம் தந்தீர்கள் ஐயா//

பாமரன் பொருளுக்கு ஒரு குறள் தீட்டி ஊக்குவித்தமைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி.

பிலஹரி:) ) அதிரா சொன்னது…

ஆஹா இனிய கருத்துமிக்க குறள்கள்.. அழகிய விளக்கங்களோடு.

Avainayagan சொன்னது…

athira said...
//ஆஹா இனிய கருத்துமிக்க குறள்கள்.. அழகிய விளக்கங்களோடு//

தங்கள் வருகைக்கு நன்றி. தங்கள் மேலான கருத்தைப் பதிவு செய்தமைக்கு நன்றி.

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.