ஒழுக்கம் விழுப்பம்
தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்
படும் திருக்குறள் 131
ஒழுக்கம் மேன்மை
தருவதால் ஒழுக்கம்
உயிரைவிட
சிறந்ததாகக் கருதப்படும் பாமரன் பொருள்
பரிந்தோம்பிக் காக்க
ஒழுக்கம் தெரிந்து ஒம்பித்
தேரினும் அஃதே
துணை குறள் 132
வருந்தி போற்றிக்
காக்கவும் ஒழுக்கத்தை ஆராய்ந்து
தெளிவு பெற்றாலும்
அதுவே துணை. பாமரன் பொருள்
ஒழுக்கம் உடைமை
குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய்
விடும் குறள் 133
ஒழுக்கம் உடைமை
மேன்மை தீயொழுக்கம்
இழிபிறப்பாக ஆகி
விடும் பாமரன் பொருள்
மறப்பினும் ஒத்து
கொளலாகும் பார்ப்பான்
பிறப்புஒழுக்கம்
குன்றக் கெடும் குறள் 134
அறநூல்களை
மறந்தாலும் கற்கலாம் சான்றோனின்
(மக்களுக்கேயுரிய) ஒழுக்கம் குறைய எல்லாம் கெடும -பாமரன் பொருள்
அழுக்காறு
உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண்
உயர்வு குறள் 135
பொறாமை உடையவனிடம்
செல்வம் நில்லாதது போல
ஒழுக்கம்
இல்லாதவனிடம் உயர்வில்லை பாமரன் பொருள்
ஒழுக்கத்தின்
ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு
அறிந்து குறள் 136
ஒழுக்கத்திலிருந்து
விலகார் மனவலிமை உள்ளோர்
தீயொழுக்கத்தால்
குற்றம்வரும் எனதெரிந்து. பாமரன் பொருள்
ஒழுக்கத்தின் எய்துவர்
மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப்
பழி குறள் 137
ஒழுக்கத்தால் மேன்மை
அடைவர் தீயொழுக்கத்தால்
அடையாத பழியை
அடைவர் பாமரன் பொருள்
நன்றிக்கு
வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை
தரும் குறள் 138
நன்மைக்குக்
காரணமாகும் நல்ஒழுக்கம் தீயொழுக்கம்
எப்போதும் துன்பம்
தரும் பாமரன் பொருள்
ஒழுக்கம்
உடையவர்க்கு ஒவ்வாவே தீய
வழுக்கியும் வாயால்
சொலல் குறள் 139
ஒழுக்கம்
உடையவருக்குப் பொருந்தாது தீயவற்றை
தவறிக்கூட வாயால்
சொல்வது. பாமரன் பொருள்.
உலகத்தோடு ஒட்ட
ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா
தார் குறள் 140
உலகத்தோடு இயைந்து
வாழ்தல் பலவற்றைக் கற்றாலும்
கற்காதவர்கள்
அறிவில்லாத வரே, பாமரன் பொருள்.
4 கருத்துகள்:
பொறாமை உடையவனிடம் செல்வம் நில்லாதது போல
ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வில்லை பாமரன் பொருள்//
அருமையான விளக்கம்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஒழுக்கம் உடைமை பற்றிய அருமையான பகிர்வு ..பாராட்டுக்கள்..
கோமதி அரசு said...
//அருமையான விளக்கம்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்//
தங்கள் வருகைக்கும், பதிவிற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்
இராஜராஜேஸ்வரி said...
//ஒழுக்கம் உடைமை பற்றிய அருமையான பகிர்வு ..பாராட்டுக்கள்//
தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.