திங்கள், 7 ஜனவரி, 2013

தீயொழுக்கத்தால் அடையாத பழியை அடைவர்




ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்       திருக்குறள் 131
ஒழுக்கம் மேன்மை தருவதால் ஒழுக்கம்
உயிரைவிட சிறந்ததாகக் கருதப்படும்    பாமரன் பொருள்

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்து ஒம்பித்
தேரினும் அஃதே துணை  குறள் 132
வருந்தி போற்றிக் காக்கவும் ஒழுக்கத்தை ஆராய்ந்து
தெளிவு பெற்றாலும் அதுவே துணை.  பாமரன் பொருள்

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்    குறள் 133
ஒழுக்கம் உடைமை மேன்மை தீயொழுக்கம்
இழிபிறப்பாக ஆகி விடும்     பாமரன் பொருள்

மறப்பினும் ஒத்து கொளலாகும் பார்ப்பான்
பிறப்புஒழுக்கம் குன்றக் கெடும்    குறள் 134
அறநூல்களை மறந்தாலும் கற்கலாம் சான்றோனின்
(மக்களுக்கேயுரிய) ஒழுக்கம் குறைய எல்லாம் கெடும -பாமரன் பொருள்

அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு  குறள் 135
பொறாமை உடையவனிடம் செல்வம் நில்லாதது போல
ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வில்லை   பாமரன் பொருள்


ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து   குறள்  136
ஒழுக்கத்திலிருந்து விலகார் மனவலிமை உள்ளோர்
தீயொழுக்கத்தால் குற்றம்வரும் எனதெரிந்து.  பாமரன் பொருள்

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி      குறள்  137
ஒழுக்கத்தால் மேன்மை அடைவர் தீயொழுக்கத்தால்
அடையாத பழியை அடைவர்     பாமரன் பொருள்

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்  குறள் 138
நன்மைக்குக் காரணமாகும் நல்ஒழுக்கம் தீயொழுக்கம்
எப்போதும் துன்பம் தரும்   பாமரன் பொருள்

ஒழுக்கம் உடையவர்க்கு ஒவ்வாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல்  குறள்  139
ஒழுக்கம் உடையவருக்குப் பொருந்தாது தீயவற்றை
தவறிக்கூட வாயால் சொல்வது.  பாமரன் பொருள்.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்  குறள் 140
உலகத்தோடு இயைந்து வாழ்தல் பலவற்றைக் கற்றாலும்
கற்காதவர்கள் அறிவில்லாத வரே,  பாமரன் பொருள்.

4 கருத்துகள்:

கோமதி அரசு சொன்னது…

பொறாமை உடையவனிடம் செல்வம் நில்லாதது போல
ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வில்லை பாமரன் பொருள்//

அருமையான விளக்கம்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஒழுக்கம் உடைமை பற்றிய அருமையான பகிர்வு ..பாராட்டுக்கள்..

Unknown சொன்னது…

கோமதி அரசு said...

//அருமையான விளக்கம்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்//
தங்கள் வருகைக்கும், பதிவிற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

இராஜராஜேஸ்வரி said...
//ஒழுக்கம் உடைமை பற்றிய அருமையான பகிர்வு ..பாராட்டுக்கள்//

தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.