ஞாயிறு, 23 டிசம்பர், 2012

எல்லோருக்கும் நல்லது பணிவு


எல்லோருக்கும் நல்லது பணிவு

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆ,ரிருள் உய்த்து விடும்   குறள்  121
அடக்கம் தேவருலகிற்கு அனுப்பும் அடங்காமை
துன்பத்தில் தள்ளி விடும்      -- பாமரன் பொருள்

காக்கப் பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனின்ஊங்கு இல்லை உயிர்க்கு.  குறள்  122
அடக்கத்தை செல்வமாக காக்கவும், அதனைவிட
சிறந்த செல்வம் இல்லை மனிதருக்கு. --  பாமரன் பொருள்.

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெரின்.    குறள் 123
செறிவறிந்து மேன்மை தரும் நல்அறிவுடன்
நடந்து அடக்கமாக வாழ்ந்தால்.  -- பாமரன் பொருள்.

நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.      குறள் 124.
ஒழுக்க நெறியில் மாறாத அடக்கமானவன் தோற்றம்
மலையைவிட மிகப் பெரியது.  -- பாமரன் பொருள்.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.   குறள்  125.
எல்லோருக்கும் நல்லது பணிதல் அவருள்ளும்
செல்வந்தருக்கோ அது செல்வம் போன்றது.  -- பாமரன் பொருள்.

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து.  குறள் 126
வாழ்க்கையில் ஆமைபோல் ஐம்புலன்களை அடக்கினால்
எப்பொழுதும் மேன்மை தரும்.    -- பாமரன் பொருள்

யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பார் சொல்இழுக்குப் பட்டு     குறள் 127.
எதைக் காக்காவிடினும் நாவைஅடக்குக அடக்காவிடில்
சோகப்படுவர் சொற்குற்றம் ஏற்பட்டு. – பாமரன் பொருள்.

ஒன்றாயினும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகாது ஆகி விடும்.   குறள் 128.
ஒன்றேஎனினும் தீயசொல் பயனுள்ள பேச்சையும்
தீயதாக ஆக்கி விடும்.  --பாமரன் பொருள். 

தீயினால் சுட்டபுண் உள்ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.       குறள் 129
தீயினால் ஏற்பட்டபுண் முழுதும் ஆறிவிடும் ஆறாது
கடுஞ்சொல்லால் ஏற்பட்ட புண். --பாமரன் பொருள்.

கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து  குறள் 130
கோபத்தையடக்கி கற்றுஅடக்கத்தோடு வாழ்பவனை
அறம் எப்பொழுதும் காக்கும். -- பாமரன் பொருள். .  .  

1 கருத்து:

Avainayagan சொன்னது…

இராஜராஜேஸ்வரி said...
"nice"

தங்களுடைய ஊக்குவிப்புக்கு நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.