ஞாயிறு, 16 டிசம்பர், 2012

தராசுபோல் நடுநிலையோடு செயல்பட வேண்டும்


செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து     குறள் 112
நடுநிலை உடையவர் செல்வம் அழியாமல்
அவர் தலைமுறைக்கும பயன்படும்.   பாமரன் பொருள்

நன்றேதரினும் நடுவுஇகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்.      குறள் 113
நல்லதே தந்தாலும் நடுநிலைதவறி வரும் செல்வத்தை
அன்றே விடவேண்டும்                பாமரன் பொருள்

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.        குறள்  114
நடுநிலையாளரா இல்லையா என்பது அவரது
புகழாலும் பழியாலும் உணரலாம்       பாமரன்  பொருள்.

கேடும் பெருக்கமும் இல்அல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி   குறள்   115
தாழ்வும் உயர்வும் வரும் போகும் மனதில்
நடுநிலை தவறாமை சான்றோர்க்கு அழகு     பாமரன் பொருள்

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின்       குறள் 116
கெட்டுவிடுவேன் நான் என்று உணர்க தான்
நடுநிலை தவறி செய்தால்     பாமரன குறள்

கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு     குறள்  117
தாழ்ந்ததாகக் கருதாது உலகம் நேர்மையாக
நடுநிலையில் செயல்பட்டு தாழ்ந்தாலும்     பாமரன் பொருள்.

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி     குறள் 118
சமமாகநின்று எடைகாட்டும் தராசுபோல் இருந்து ஒருபக்கம்
சாயாதிருத்தல் சான்றோர்க்கு அழகு      பாமரன் பொருள்.

சொற்கோட்டம் இல்லாது செப்பம் ஒருதலையா
உள்கோட்டம் இன்மை பெறின்     குறள்  119.
சொல்தடுமாற்றம் இராது நடுநிலையுடன் ஒருபக்கமாகும்
மனத்தடுமாற்றம் இல்லையெனில்.     பாமரன் பொருள்.

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.       குறள்   120
வியாபாரம் செய்பவருக்கு வியாபாரத்தில் பிறர் பொருளையும்
தமதுபோல எண்ணி செய்வதே நல்லது.  பாமரன் பொருள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.