வெள்ளி, 25 நவம்பர், 2016
புதன், 23 நவம்பர், 2016
செல்வரை எல்லாரும் சிறப்பு செய்வர்
வியாழன், 1 செப்டம்பர், 2016
போரிடும் திறன் இல்லாதவரிடம் இருந்தால் அரண் இல்லாததாகவே ஆகும்
போரிடும் திறன் இல்லாதவரிடம் இருந்தால் அரண் இல்லாததாகவே ஆகும்
பொருட்பால் அரணியல் அரண்
குறள்
எண் 741 முதல்
750 வரை
ஆற்று பவர்க்கும் அரண்பொருள்
அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள் குறள் 741
போர்செய்யச் செல்பவர்க்கும் அரண்
சிறந்தது பயந்து
உள்ளே இருப்பவருக்கும் அதுவே
சிறந்தது பாமரன்
பொருள்
மணிநீரும் மண்ணும் மலையும்
அணிநிழற்
காடும் உடைய தரண் குறள் 742
தெளிந்த நீர் வெட்ட
வெளிநிலம் மலை காடு என
நான்கும் உள்ளதே அரண் பாமரன் பொருள்
செவ்வாய், 16 பிப்ரவரி, 2016
நல்லரசு அமையா நாட்டில் எல்லா வளங்களும் இருந்தும் பயனில்லையே
பொருட்பால்
அரணியல்
நாடு
குறள் # 731 முதல் 740 வரை
தள்ளா விளையுளும் தக்காரும்
தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு குறள் # 731
குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லா செல்வம்
உடையவரும் சேர்ந்து வாழ்வதே நாடு. பாமரன்
பொருள்
பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு
குறள் # 732
பொருள்வளம் உடையதாய் எல்லோரும் விரும்பத் தக்கதாய்
கேடில்லாததாய்
அதிக விளைச்சலை உடையதே நாடு. பாமரன் பொருள்
பொறைபொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறைபொருங்கு நேர்வது நாடு
குறள் # 733
மக்கள் பிறநாடுகளிலிருந்து வந்தால் அப்பாரத்தையும் தாங்கி
தன் அரசிற்கு
தரவேண்டுய வரிகளையும் தரவல்லது நாடாகும். பாமரன்
பொருள்
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு
குறள் # 734
அதிகபசியும் ஓயாத நோயும் தாக்கி அழிக்கும் பகையும்
சேராமல் நடைபெறுவதே நாடாகும் பாமரன்
பொருள்
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லத நாடு குறள் # 735
பலமாறுபட்ட குழுக்களும் உடனிருந்தே அழிக்கும் பகையும் அரசனை வருத்துகிற
கொலைகாரர்களால் விளையும் பொல்லாங்கும் இல்லாததே நாடு பாமரன் பொருள்
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை.
குறள் # 736
பகைவரால் கெடுதலை அறியாததாய் கெட்ட நேரத்திலும்
வளம்குன்றாததாய்
உள்ள நாடே நாடுகளில் தலைமையானது. பாமரன் பொருள்
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு குறள் # 737
ஆற்றுநீரும் ஊற்று நீரும் அமைந்த மலையும் ஆறாகவரும்
நீர்வளமும்
வலிமையான அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும். பாமரன் பொருள்
பிணியின்மை செல்வம்
விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து
குறள் # 738
நோயின்மை செல்வம் நல்விளைச்சல் மகிழ்ச்சி நல்ல காவல்
நாட்டிற்கு அழகு என கூறப்படும் ஐந்து. பாமரன் பொருள்
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளர்ந்தரு நாடு
குறள் 739
நன்னாடு என்பது இயற்கை வளங்கள் உள்ளதே சிறந்த நாடல்ல
தேடி முயன்றால் வளம்தரும் நாடு. பாமரன்
பொருள்
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.
குறள் # 740.
எல்லா வளங்களும் அமைந்தாலும் பயனில்லையே
நல்ல அரசு அமையாத நாட்டில். பாமரன் பொருள்
ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016
நல்லறிஞரின் அவைக்கு அஞ்சுபவர் கல்லாதவரைவிடக் கீழானவர்
பொருட்பால் --
அமைச்சியல் --
அவையஞ்சாமை
குறள் 721 முதல் 730 வரை
அமைச்சியல் --
அவையஞ்சாமை
குறள் 721 முதல் 730 வரை
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர். குறள் #
721
அவையின் வகைதெரிந்து பேசும்போது பிழையாகப் பேசமாட்டார் சொல்லின்
வகையறிந்த தூய்மை யானவர்கள். பாமரன் பொருள்
கற்றாருள் கற்றார்
எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு
வார். குறள் # 722
கற்றவர்களுள் கற்றவராக
மதிக்கப்படுவர் கற்றவர்கள்முன்
தான் கற்றவற்றை
மனதில்பதியுமாறு சொல்ல வல்லவர்.. பாமரன் பொருள்
ஞாயிறு, 24 ஜனவரி, 2016
அவையின் தன்மையையும், நேரத்தையும், நிலையையும் அறிந்து பேசவேண்டும்

திருக்குறள் பொருட்பால்
அமைச்சியல்
அவைபறிதல்
குறள் 711 முதல் 720 வரை
அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த
தூய்மை யவர் குறள் # 711
அவையின்
தன்மையறிந்து சரியான சொல்லை ஆராய்ந்து சொல்லுக
சொற்களை நன்கறிந்த தூய்மையானவர். பாமரன்
பொருள்
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர் குறள் # 712
அவையின்
நேரத்தையும் நிலைமையையும் நன்குணர்ந்து சொல்லுக
சொற்களின்
நடையை அறிந்த நல் அறிஞர்கள். . பாமரன் பொருள்
புதன், 9 டிசம்பர், 2015
கண்ணாடி போல நெஞ்சில் நிகழ்வதை காட்டிவிடும் ஒருவரது முகம்.
புதன், 11 நவம்பர், 2015
காக்க விரும்பினால் அரியதவறு நேராது காக்கவும்
காக்க விரும்பினால் அரியதவறு நேராது காக்கவும்
அகலாது அணுகாது தீக்காய்வார்
போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொ.ழுகு
வார் குறள்
# 691
அதிகம் நீங்காதும் அதிகம் நெருங்காதும் தீயில் குளிர்காய்வது போல்
இருப்பர்
அரசைச் சார்ந்து வாழ்பவர்.
பாமரன் பொருள்
செவ்வாய், 27 அக்டோபர், 2015
தனக்கு அழிவைத் தருவதாயினும் அஞ்சாது பணியாற்றுபவரே நல்ல தூதர்
பொருட்பால் அமைச்சியல் தூது
681 முதல் 690 வரை
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு குறள் # 681
அன்புள்ளவராதல் நல்ல குடிப்பிறப்பு
அரசுவிரும்பும்
நற்பண்பு உள்ளவராதல் தூதருக்கான
தகுதி பாமரன்
பொருள்
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை
தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று குறள்
# 682
அன்பு அறிவு ஆராய்ந்து
பேசும் சொல்திறமை தூதருக்கு
தேவையான முக்கிய மூன்று
பண்புகள் பாமரன்
பொருள்
ஞாயிறு, 21 ஜூன், 2015
காலந்தாழ்த்தாது செய்யவேண்டியவற்றை தாமதியாமல் செய்க
பொருட்பால் அமைச்சியல் வினைசெயல்வகை
குறள் 671 முதல் 680 வரை.
சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
குறள் 671
ஆராய்தலின் முடிவு செய்யும் துணிவுபெறல் அத்துணிவை செயல்படுத்த
காலந்தாழ்த்துதல் தீங்கானது.
பாமரன் பொருள்
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
குறள் 672
மெதுவாகச் செய்யக் கூடியவற்றை தாமதித்துச்
செய்யலாம், தாமதிக்கக்காதீர்
காலந்தாழ்த்தாது செய்ய வேண்டிய வேலைகளை. பாமரன் பொருள்
புதன், 29 ஏப்ரல், 2015
சொல்வது எல்லோருக்கும் சுலபம்
பொருட்பால் அமைச்சியல் வினைத்திட்பம்
குறள் எண் 661 முதல் 670
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற
குறள் 661
செயலில் உறுதி என்பது ஒருவரின் மனஉறுதியே
மற்றவை எல்லாம் வேறு.
பாமரன் பொருள்.
ஊறுஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறுஎன்பர் ஆய்ந்தவர் கோள்.
குறள் 662
இடையூறை நீக்குதல் அதுவந்தால் மனம் தளராமை இவ்விரண்டும்
வழிஎன்பது ஆராய்தறிந்தவரின் கொள்கை. பாமரன்
பொருள்.
கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமம் தரும்.
குறள் 663
செயல்முடிவில் தெரியும்படி செய்யும்தகுதியே ஆளுமை இடையில் தெரிந்தால்
நீங்காத துன்பத்தைத் தரும். பாமரன் பொருள்.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
குறள் 664
சொல்லுவது எல்லோருக்கும் எளிது, கடினம்
சொல்லிய படி அதைச் செய்தல். பாமரன்
பொருள்.
ஞாயிறு, 29 மார்ச், 2015
துன்பம் ஏற்பட்டாலும் இழிவான செயல் செய்யமாட்டார் தெளிந்த அறிவுடையவர்
பொருட்பால்
அமைச்சியல்
வினைத்தூய்மை
குறள் 651 முதல் 660 வரை
துணைநலம் ஆக்கம் தருஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும் குறள்
# 651
ஒருவருக்கு நல்லதுணை வலிமையைத் தரும் நற்செயல்
விரும்பிய எல்லாம் தரும்.
பாமரன் பொருள்
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை. குறள்
# 652
என்றும் விட்டொழிக்க வேண்டும், புகழையும்
நன்மையையும் தராத செயல்களை.
பாமரன் பொருள்
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு பவர்.
குறள் # 653
மேன்மையை அழிக்கும் செயலை விட வேண்டும் செயலில்
மென்மேலும் உயர முயல்பவர் பாமரன்
பொருள்
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.
குறள் # 654
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




