சனி, 14 ஜனவரி, 2012

செய்ய வேண்டியவை செய்யாததால் கேடு வரும்


செயத்தக்க அல்ல செயக்கெடும் செயத்தக்க
செய்யாமை யாலும் கெடும்                குறள்  466

செய்யக் கூடாதது செய்ய கெடும் செய்ய வேண்டியவை
செய்யாத தாலும் கெடும்                     பாமரன் குறள்


அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல்
நல் வாழ்த்துக்கள்

என் வலைப்பதிவை ஆரம்பித்து ஒருவருடத்துக்கு மேலாகியும் பலரது பார்வையில் படாமலே இருந்துவந்தது. சிலமாதங்கள் முன்பு தான் ஒரு நண்பர் மூலமாக வலைப்பதிவு திரட்டிகள் பற்றி கேள்விப் பட்டேன். அவற்றில் பதிவு செய்த சில மாதங்களிலேயே ஆயிரம் பேருக்குமேல் என் எழுத்துக்களைப் படித்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

வலைப்பதிவைப் படித்துச் செல்லும் சக பதிவர்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் ஊக்குவிப்பும் என்னை மேலும் மேலும் எழுதத்தூண்டுகின்றன. என் எழுத்துக்களைப் படித்தவர்கள், பின்னூட்டமிட்டவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி யை தெரிவித்துக்கொள்கிறேன். எப்பொழுதும் உங்கள் கருத்துக் களையும் ஆலோசனைகளையும் பெரிதும் மதிக்கிறேன்,

 

நன்றி   நன்றி  நன்றி


இப்படிக்கு
வியபதி, அவை நாயகன்

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

துறவியர் பெருமை


சுவை வெளிச்சம் (தொடு)உணர்வு ஓசை வாசனை இவ்வைந்தின்
வகைதெரிந்த துறவியர் பின்னே உலகம்       பாமரன் குறள்

சுவைஒளி ஊறுஓசை நாற்றம் என்ற ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு                         குறள் 27
                         
மெய்ப்பொருள் அறிந்த துறவியர் பெருமை உலகில்
அவர்களின் நூல்கள் காட்டும்                       பாமரன் குறள்

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்                        குறள் 28

பண்புகள் நிறைந்த துறவியரின் கோபம்
கணநேரமும் நிலைத்து இருக்காது                   பாமரன் குறள்

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல்  அரிது                             குறள் 29