குறள் பால்: அறத்துப்பால்.
குறள் இயல்: துறவறவியல்.
அதிகாரம்: அவாவறுத்தல்.
அவாஎன்ப எல்லா
உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும்
வித்து. குறள் # 361
ஆசைஎன்பது எல்லா
உயிர்களுக்கும் எப்பொழுதும்
தவறாமல் வரும் பிறப்பைத்தருகின்ற விதை பாமரன் பொருள்
வேண்டுங்கால்
வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். குறள் # 362
வேண்டும்போது
பிறவாமையை விரும்பவேண்டும் அது
ஆசையற்ற நிலையை வேண்டுகிறபோது வரும். பாமரன் பொருள்
வேண்டாமை அன்ன
விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது
இல். குறள் # 363
ஆசையில்லா நிலை போன்ற
சிறந்த செல்வம் இப்பூமியில் இல்லை
வேறெங்கும்கூட அதற்கு நிகரானது இல்லை. பாமரன் பொருள்
|
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும். குறள் # 364
தூய்மை என்பது ஆசையில்லாது இருப்பதே அத்தன்மை
மெய்ப்பொருளை வேண்டும்போது வரும். பாமரன் பொருள்
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர். குறள் # 365
பற்றற்ற துறவிஎனப்படுவர் ஆசைகளை விட்டவரே மற்றவர்
மழுவதுமாக விட்டவர் இல்லை. பாமரன் பொருள்
|
11 கருத்துகள்:
மிகவும் அருமை ஐயா... உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...
திண்டுக்கல் தனபாலன் said...
//மிகவும் அருமை ஐயா... உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..//
பதிவை வலைத்தளத்தில் இட்டவுடன் உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தேன்.மகிழ்வுற்றேன். தங்கள் வருகைக்கும் ஊக்குவிப்பிற்கும் நன்றி
நீங்கள் சென்னை வந்ததிலும் உங்களை சந்தித்ததிலும் எனக்கு மிக்க மகிழ்ச்சி,
திண்டுக்கல் தனபாலன் said...
எனது பதிவின்கீழ் கமெண்ட்டைப் பார்க்கிறேன் அவற்றிற்கு பதிலிட முடிகிறதென்றால் அது உங்கள் உதவியினால்தான்.
ஆசையில்லா நிலை போன்ற சிறந்த செல்வம் இப்பூமியில் இல்லை
வேறெங்கும்கூட அதற்கு நிகரானது இல்லை.
அருமையான பகிர்வுகள் பாராட்டுக்கள்..!
ஆசையில்லா நிலை போன்ற சிறந்த செல்வம் இப்பூமியில் இல்லை
வேறெங்கும்கூட அதற்கு நிகரானது இல்லை.
நன்றாக சொன்னீர்கள்.
வாழ்த்துக்கள்.
அடடா சென்னை பதிவர் சந்திப்பில், பலபேரைச் சந்தித்து நட்பை பலப்படுத்துவது மிக்க மகிழ்ச்சியைக் கொடுக்குது.
ஆசையில்லா நிலை.. அழகாக இருக்கு குறள் உண்மைதான்ன்.. உலகத்தில் பல அழிவுக்கும் காரணம் ஆசைதானே.. தெரிந்தும் ஆசைப்படுகிறோம்ம்.. ..
வாழ்த்துக்கள்.
இராஜராஜேஸ்வரி said....
//அருமையான பகிர்வுகள் பாராட்டுக்கள்..//
தங்கள் வருகைக்கும் பாராட்டுகும் நன்றி
கோமதி அரசு said...
//நன்றாக சொன்னீர்கள்.
வாழ்த்துக்கள்.//
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி
athira said...
//அடடா சென்னை பதிவர் சந்திப்பில், பலபேரைச் சந்தித்து நட்பை பலப்படுத்துவது மிக்க மகிழ்ச்சியைக் கொடுக்குது//
நன்றாகச்சொன்னீர்கள். பதிவர் விழாவில் பலபேரைச் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வெகு தொலைவில் உள்ளவர்களைத்தான் இது போன்ற சந்திப்புகளில் கூட சந்திக்கும் வாய்ப்பு இல்லாமல் போகிறது
athira said...
//ஆசையில்லா நிலை.. அழகாக இருக்கு குறள் உண்மைதான்ன்.. உலகத்தில் பல அழிவுக்கும் காரணம் ஆசைதானே.. தெரிந்தும் ஆசைப்படுகிறோம்ம்.. ..
வாழ்த்துக்கள்.//
என்ன செய்வது தெரிந்தும் ஆசைப்படுகிறோம்ம்ம்
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.