முதுமையில் செய்யலாமென எண்ணாதுஅறம் செய்க அதுவே
இறுதிக் காலத்தில் துணையாகும் பாமரன் குறள்
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை குறள் 36
அறத்தின் பயன் இதுவென கூறவேண்டாம் பல்லக்கில்
பயணிப்பவன் தூக்குபவன் இடையில் பாமரன் குறள்
அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை குறள் 37
நாள் தவறாமல் அறம் செய்தால் அதுவே
பிறவியைத் தடுக்கும் கல் பாமரன் குறள்
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல் குறள் 38
அறவழியில் வருவதே இன்பம் வேறுவழி வருபவை
இன்பமுமில்லை புகழுமில்லை பாமரன் குறள் அறத்தான் வருவதே இன்பம்மற்று எல்லாம்
புறத்த புகழும் இல குறள் 39
செய்யவேண்டியவை எல்லாம் அறனே ஒருவருக்கு
செய்யக்கூடாதவை பழிதரும் பாவச்செயல் பாமரன் குறள்
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி குறள் 40