புதன், 12 நவம்பர், 2014

நாட்டு பாதுகாப்பைச் செய்துகொள்ளாது ஆட்சிசெய்பவர் அஞ்சி அழிந்து போவார்.


பொருட்பால் -

 அரசியல் - 

வெருவந்தசெய்யாமை


குறள் 561 முதல  570 வரைதக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து  குறள் # 561
குற்றத்தை நடுநிலையோடு ஆராய்ந்து மீண்டும் அக்குற்றத்தைச் செய்யாதபடி
குற்றத்திற்கு ஏற்ப தண்டனை தருவதே நல்ல அரசு.    பாமரன் பொருள்

கடிதோச்சி மெல்ல எறிகநெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்   குறள் # 562
கடுமையாக தண்டிப்பதுபோல தொடங்கி மென்மையாக தண்டிப்பீர் நெடுங்காலம்
மேன்மை நீங்காமல் இருக்க விரும்புபவர்.        பாமரன் பொருள்

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்   குறள் # 563
மக்கள் அஞ்சும்படி கொடுமைகள் செய்யும் கொடுங்கோல் ஆட்சியானால்
உறுதியாக விரைவில் அழியும்.       பாமரன் பொருள்

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச் சொல்வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்   குறள்  # 564
ஆள்பவர் கொடியவர் என்று மக்களால் சொல்லப் படும்கொடிய அரசு
ஆயுள் குறைந்து விரைவில் அழியும்.     பாமரன் பொருள்

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஏய்கண் டன்னது உடைத்து  குறள் # 565
எளிதில் காணமுடியாத கடுகடுத்த முகத்தை உடையவரின் பெருஞ்செல்வம்
பேய் காத்திருப்பது போன்றது ஆகும்.           பாமரன் பொருள்

கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்   குறள்   # 566
கடுஞ்சொல் பேசுபவனாக கருணையில்லாதவராக இருந்தால் வளமான ஆட்சி
நீடிக்காமல் விரைவில் அழியும்.       பாமரன் பொருள்

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.    குறள்  # 567
கடுஞ்சொல்லும் முறையற்ற தண்டனையும் ஆள்பவரின்
பகைவரை வெல்லும் வலிமையைக் குறைக்கும் கருவி..     பாமரன் பொருள் 

இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு.   குறள் @ 568
உடனுள்ளவர்களுடன் கலந்துஎண்ணாத ஆள்பவர் சினம் கொண்டு
சீறினால் செல்வம் நாளும் குறையும்.     பாமரன் பொருள்

செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்  குறள்  # 569
போர்வரும்போது தேவையான பாதுகாப்பைச் செய்துகொள்ளா ஆட்சியர்
அஞ்சி அழிந்து போவார்.        பாமரன் பொருள்

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை   குறள்  # 570
கல்லாதவர்களைத் துணையாகக் கொள்ளும் கொடுங்கோல் ஆட்சியர்
நிலத்துக்குப் பெருஞ் சுமை.      பாமரன் பொருள்

4 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நன்றி நண்பரே

Viya Pathy சொன்னது…

Than gal varugaykkum padhivirkkum nandri

athira சொன்னது…

உண்மையேதான்..

Viya Pathy சொன்னது…

athira சொன்னது…
''உண்மையேதான்.''

தங்கள் வருகைக்கு நன்றி. கருத்துப் பதிவிற்கும் நன்றி.

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.