செவ்வாய், 2 செப்டம்பர், 2014

அரசுக்குப் புகழ்தருவது நேர்மையான ஆட்சியே


+பொருட்பால்   * அரசியல்   *   கொடுங்கோன்மை  *
குறள்  551 முதல் 560 வரை

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து     குறள்   #  551
கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும் அறவழிமீறி
மக்களுக்கு நல்லன அல்லாதவற்றைச் செய்யும் அரசு.   பாமரன் பொருள் 

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.          குறள்  # 552
ஆயுதம் ஏந்தியகள்வன் பொருளைக் கொடு என மிரட்டுவதுபோன்றது
ஆளுபவர் அதிகாரத்துடன் மிகஅதிக வரிகேட்பது.   பாமரன் பொருள் 

.நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.          குறள் # 553
ஒவ்வொரு நாளும் நன்மைதீமை ஆராய்ந்து ஆட்சிசெய்யா அரசு
ஒவ்வொரு நாளும் சீர்குலைந்து அழியும்.     பாமரன் பொருள் 

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு        குறள் # 554
பொருளையும் மக்களையும் சேர்த்து இழக்கும் நடுநிலை
ஆராயாமல் தவறாக ஆட்சி செய்யும் அரசு.   பாமரன் பொருள் 
  
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை   குறள்  # 555
துன்பப்பட்டு துன்பம்தாங்காது மக்கள் அழுத கண்ணீர்தான்
அரசின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம்.     பாமரன் பொருள் 

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி      குறள் # 556
அரசுக்குப் புகழ்தருவது நேர்மையான ஆட்சியே அதுஇல்லையெனில்
புகழ்நிலைக்காமல் சரிந்து போகும்.     பாமரன் பொருள் 

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு     குறள் # 557
மழைஇல்லாமை உலகுக்கு துன்பம் தருவதுபோல் அரசின்
அருள்இல்லாமை மக்களுக்குத் துயரம் தரும்.    பாமரன் பொருள் 

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.      குறள்  #558
வறுமையைவிட துன்பம்தருவது செல்வமுடைமை தவறாக ஆளும்
ஆட்சியின் கீழ் வாழ நேர்ந்தால்.     பாமரன் பொருள் 

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.      குறள் # 559 
ஆள்பவர் நேர்மைதவறி ஆட்சிசெய்தால் பருவமழை தவறி
மேகம் மழை பெய்யாது போகும்.     பாமரன் பொருள் 

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.       குறள் #560
பால்வளம் குறையும் அறவோர் அறநூல் மறப்பர்

ஆட்சியாளர் முறைப்படி காக்காவிட்டால்.    பாமரன் பொருள்  

7 கருத்துகள்:

athira சொன்னது…

உண்மையான தலைப்பு.... ஆட்சி சரியில்லை எனில் எல்லாமே பிழைத்துவிடும்..

athira சொன்னது…

நீங்களும் உங்களுக்கு வோட் பண்ணாலாமே .. மேலே...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஆட்சியாளர் மாட்சிமைபற்றி அருமையான பகிர்வுகள்.

Viya Pathy சொன்னது…

athira சொன்னது…
உண்மையான தலைப்பு.... ஆட்சி சரியில்லை எனில் எல்லாமே பிழைத்துவிடும்.

வாங்க வாங்க உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

Viya Pathy சொன்னது…

athira சொன்னது…
நீங்களும் உங்களுக்கு வோட் பண்ணாலாமே .. மேலே

அப்படியும் செய்யலாமோ?!

Viya Pathy சொன்னது…

இராஜராஜேஸ்வரி சொன்னது…
ஆட்சியாளர் மாட்சிமைபற்றி அருமையான பகிர்வுகள்

அவ்வளவு வேலைகளுக்கிடையேயும் வருகை தந்து உங்கள் கருத்தையும் பதிவு செய்துள்ளமைக்கு என் நன்றிகள்.

manavai james சொன்னது…

அன்புள்ள அய்யாஅவர்களுக்கு,
வணக்கம். வாழ்த்துகள்,
எனது ‘வலைப்பூ‘ பக்கம் வருகை புரிந்து கருத்திடஅன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.