திங்கள், 13 ஜனவரி, 2014

பொங்கல் மற்றும் உழவர்திருநாள் வாழ்த்துக்கள்

பொங்கல் வாழ்த்துக்கள்




அனைவருக்கும் பொங்கல் மற்றும் உழவர்திருநாள் வாழ்த்துக்கள்


பொருட்பால்
அரசியல்
அதிகாரம் - சிற்றினம் சேராமை
குறள் 451 முதல் 455 வரை
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்   குறள் # 451
பெரியோர் கீழ்மக்களோடு சேர அஞ்சுவர். சிறியவர்கர்கள்தான்
அத்தகு கீழ்மக்களையே உறவாகக் கருதுவார்கள்.     பாமரன் பொருள்

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்பது ஆகும் அறிவு.   குறள் # 452
இருக்கும் நிலத்தின் தன்மையை நீர் அடைவதைப் போன்றது மக்களின் அறிவும் அவர்சார்ந்த இனத்தின் இயல்பாக ஆகிவிடும்.   பாமரன் பொருள்

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்.. குறள் # 453
மனத்தால் இயற்கையறிவு மக்களுக்கு ஏற்படும். சார்ந்தஇனத்தால்
இப்படிப் பட்டவன். எனும் சொல் உண்டாகும்.  .     பாமரன் பொருள்

மனத்துஉளது போலக் காட்டி ஒருவற்கு
இனத்துஉளது ஆகும் அறிவு,       குறள் # 454
ஒருவரின் இயல்பு அவரது மனதால் உண்டாவதுபோல தெரிந்தாலும்
அவர் சார்ந்த இனத்தால் வெளிப்படுவதே ஆகும்.  .     பாமரன் பொருள்

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்..    குறள் # 455
மனத்தின்தூய்மை செய்யும் செயலின்தூய்மை இரண்டும்
சேர்ந்த இனத்தின் தூய்மையைக் கொண்டே ஏற்படும். .   பாமரன் பொருள்


8 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தித்திக்கும் இனிய தைப் பொங்கல் + உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இனிய பொங்கல் மற்றும் உழவர்திருநாள் வாழ்த்துக்கள்

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

பொங்கல் தினத்துக்கேற்ப நல்ல குறள்கள்.’

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் , மற்றும் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

asha bhosle athira said...
பொங்கல் தினத்துக்கேற்ப நல்ல குறள்கள்.’ உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் , மற்றும் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் பூஸானந்தாவிற்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் பொங்க\ல் வாழ்த்துக்களுக்கும் நன்றி

இளமதி சொன்னது…

இன்றைய காலகட்டத்தில் அவசியமான பயன்தரவல்ல குறள்களும் அதற்கு உங்கள் விளக்கமும் மிக அருமை ஐயா!..

பொங்கலிட்டுப் போற்றியே பூமிவளம் காத்திடுவோம்
எங்களுக்கும் ஈய்ந்தருள் என்று!

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த
இனித்திடும் தமிழ்ப்புத்தாண்டுப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

Unknown சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் said...
தித்திக்கும் இனிய தைப் பொங்கல் + உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

பொங்கல் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துக்களுக்கு நன்றி உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் வாழ்த்துக்களும் உழவர்திருநாள் வாழ்த்துக்களும் தெரிவித்துக்கொள்கிறேன்

Unknown சொன்னது…

இராஜராஜேஸ்வரி said...
இனிய பொங்கல் மற்றும் உழவர்திருநாள் வாழ்த்துக்கள்//

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் வாழ்த்துக்களும் உழவர் திருநாள் வாழ்த்துக்களும் தெரிவித்துக்கொள்கிறேன்

Unknown சொன்னது…

இளமதி said...
இன்றைய காலகட்டத்தில் அவசியமான பயன்தரவல்ல குறள்களும் அதற்கு உங்கள் விளக்கமும் மிக அருமை ஐயா!.. பொங்கலிட்டுப் போற்றியே பூமிவளம் காத்திடுவோம் எங்களுக்கும் ஈய்ந்தருள் என்று//
தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.