திங்கள், 26 ஆகஸ்ட், 2013

விருப்பு, வெறுப்பு, அறியாமை இல்லாமல் வாழ்ந்தால் துன்பங்கள் நெருங்காது.

      அறத்துப்பால், குறள் இயல்:துறவறவியல் 
அதிகாரம்: மெய்யுணர்தல் 
குறள் எண்கள்: 356 - 360
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.                குறள் # 356
இங்குகற்று மெய்ப்பொருள் உணர்ந்தவர் மேற்கொள்வர்
மீண்டும் இங்கு பிறக்காமலிருக்கும் வழியை.       பாமரன் பொருள்

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.     குறள் # 357
ஒருவனது உள்ளம் உண்மைப்பொருளை (ஆராய்ந்து) உணர்ந்தால் நிச்சயமாக 
மறுபடியும் ஓர்பிறவி உண்டென எண்ணவேண்டாம்.  பாமரன் பொருள்
பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.       குறள் # 358
பிறவியெனும் அறியாமை விலக சிறந்தநிலைக்கு காரணமாம்
உண்மைப் பொருளைக்காண்பதே  அறிவுடைமை.    பாமரன் பொருள்

சார்புணர்ந்து சார்புகெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்    குறள் # 359
காரணமானதை உணர்ந்து அப்பற்றைவிலக்கி வாழ்ந்தால் ஒழுக்க உணர்வை அழித்து
பற்றமாட்டா பற்றவரும் துன்பங்கள்                   பாமரன் பொருள்

காமம் வெகுளி மயக்கம் இம்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.   குறள் # 360
விருப்பு வெறுப்பு அறியாமை எனும் இம்மூன்றின்

பெயரும் கெடும்படி நடந்தால் துன்பங்கள் வராது..        பாமரன் பொருள்

8 கருத்துகள்:

ராஜி சொன்னது…

குறள்களும் அதற்குண்டான் விளக்கமும் தெரிந்துகொண்டேன்.

Unknown சொன்னது…

ராஜி said...
//குறள்களும் அதற்குண்டான் விளக்கமும் தெரிந்துகொண்டே//

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்லது... நன்றி.....

கோமதி அரசு சொன்னது…

விருப்பு, வெறுப்பு, அறியாமை இல்லாமல் வாழ்ந்தால் துன்பம் இல்லை உண்மைதான். குறள் சொல்லும் நீதி அருமையாக சொன்னீர்கள்.

Unknown சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் said...
நல்லது... நன்றி

தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

Unknown சொன்னது…

கோமதி அரசு said...
விருப்பு, வெறுப்பு, அறியாமை இல்லாமல் வாழ்ந்தால் துன்பம் இல்லை உண்மைதான். குறள் சொல்லும் நீதி அருமையாக சொன்னீர்கள்

தங்கள் வருகைக்கும், ஊக்குவிப்புக்கும் நன்றி

இராஜராஜேஸ்வரி சொன்னது…

குறள் சொல்லும் நீதி அருமை ...!பாராட்டுக்கள்..!

Unknown சொன்னது…

ராஜேஸ்வரி said...
குறள் சொல்லும் நீதி அருமை ...!பாராட்டுக்கள்..!

தங்கள் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.