திங்கள், 19 ஆகஸ்ட், 2013

பொருளின் உண்மைத் தன்மையை உணர்வதே அறிவுடைமை.



குறள் பால்; அறத்துப்பால் குறள் இயல்; துறவறவியல்
அதிகாரம் – மெய்யுணர்தல்  
குறள் வரிசை: 351 முதல் 355 வரை

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணப் பிறப்பு     குறள் # 351
மெய்ப் பொருள் அல்லாதவற்றை மெய்ப்பொருளென்று எண்ணும்
மயக்கத்தால் உண்டாகும் இழிவான பிறப்பு.   பாமரன் பொருள்.

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.  குறள் # 352  
அறியாமைஇருள் அகற்றி இன்பத்தைக் கொடுக்கும் மயக்கம்நீங்கி
குற்றமற்ற மெய்யுணர்வை உணர்ந்தவர்க்கு.     பாமரன் பொருள்

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.        குறள் # 353
சந்தேகத்திலிருந்து விடுபட்டு தெளிவுபெற்றவர்க்கு உலகத்தைவிட
வான்உலக்ம் அருகில் உளதாகும்.   பாமரன் பொருள்

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு,    குறள் # 354
ஐம்புலன்களின் உணர்வுகளை அடக்கியபோதும் பயனில்லை
உண்மையை உணரும் அறிவில்லாதவருக்கு.     பாமரன் பொருள்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.     குறள் # 355
எந்தப்பொருள் எத்தன்மையுடையாதாகத் தோன்றினாலும் அப்பொருளின்
உண்மைத் தன்மையை உணர்வதே அறிவுடைமை.   பாமரன் பொருள்  

8 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வந்து விட்டேன்...

Unknown சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் said...
வந்து விட்டேன்...

தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

உண்மையேதான்.. குறளும் விளக்கமும்.. அருமை.

Unknown சொன்னது…

athira said...
//உண்மையேதான்.. குறளும் விளக்கமும்.. அருமை//

தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

கோமதி அரசு சொன்னது…

குறள் படித்து அதன் எளிமையான விளக்கமும் கிடைப்பது மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள்.

sathishsangkavi.blogspot.com சொன்னது…

குறலும் விளக்கமும் நன்று...

Unknown சொன்னது…

கோமதி அரசு said...
''குறள் படித்து அதன் எளிமையான விளக்கமும் கிடைப்பது மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்''.

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி

Unknown சொன்னது…

சங்கவி said...
''குறளும் விளக்கமும் நன்று..''

தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.