புதன், 24 ஜூலை, 2013

யாரிடமும் கோபத்தை தவிர்ப்போம்.

                   அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல்.                               அதிகாரம்: வெகுளாமை. (சினங்கொள்ளாமை)
                              குறள் 301 முதல் 305 வரை
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்.      குறள் # 301
பலிக்கும் இடத்தில் கோபம் கொள்ளாதவனே சினங்காப்பான் பலிக்காதஇடத்தில்
கோபத்தை அடக்கினால் என்ன அடக்காவிட்டால் என்ன.     பாமரன் பொருள்

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.               குறள் # 302
பலிக்காத இடத்தில் கோபம் தீமையானது, பலிக்குமிடத்திலும்
கோபத்தைவிட தீயது வேறுஇல்லை.        பாமரன் பொருள்.

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.        குறள் # 303
யாரிடமும் கோபத்தை தவிர்ப்போம். தீமைகள்
விளைவது கோபத்தால் வரும்.       பாமரன் பொருள்.

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.     குறள் # 304
முகமகிழ்வும் மனமகிழ்வும் கெடுக்கும் கோபத்தைவிட
பகையானது வேறு உண்டோ.         பாமரன் பொருள்.

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.     குறள் # 305
தன்னை காக்கவிரும்பினால் கோபத்தை அடக்குக, அடக்காவிட்டால்
தன்னையே அழிக்கும் கோபம்.         பாமரன் பொருள்.

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... வாழ்த்துக்கள்...

Viya Pathy சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் said... '' அருமை... வாழ்த்துக்கள்...''
தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. (இந்நன்றியைப் பதிவிட உதவியமைக்கு தனி நன்றி)

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.