வெள்ளி, 19 ஜூலை, 2013

பொய்யொழுக்கம் வருந்தும்படி துன்பம் பலவும் தரும்



அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: கூடாவொழுக்கம்.
                                          (குறள் 271 முதல் 275 வரை) 


வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.      குறள் # 271
வஞ்சமனம் உடையவனின் பொய்யொழுக்கத்தைக்காண உடலிலுள்ள
ஐந்து பூதங்களும் தமக்குள் சிரிக்கும்.      பாமரன் பொருள்
 

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்.        குறள் # 272.
வான்போல உயர்ந்த தவவேடம் என்னபலன்தரும் தன்மனம்
தான் அறிந்த குற்றம் செய்தால். பாமரன் பொருள்

வலிஇல் நிலையமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று,    குறள் # 273.
மனதைஅடக்கும் வலிமைஇல்லாதவனின் தவக்கோலம், பசு
புலித்தோல் போர்த்தி மேய்வதைப் போன்றது. பாமரன் பொருள்


தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.     குறள் # 274
தவக்கோலத்தில் தீச்செயல் செய்வது, புதரில்மறைந்து
வேடன் பறவைகளைப் பிடிப்பது போன்றது.     பாமரன் பொருள்


பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும்        குறள் # 275
பற்று விட்டோம் என்பவரின் பொய்யொழுக்கம் என்னசெய்தோம் எனவருந்தும்படி
துன்பம் பலவும் தரும்,       பாமரன் பொருள்
 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.