ஞாயிறு, 21 ஜூலை, 2013

செய்யும் செயலால் மனிதரை உணர்க. (தோற்றத்தால் அல்ல)

    அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: கூடாவொழுக்கம்.
                                          (குறள் 276 முதல் 280 வரை) 

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.      குறள் 276
மனதால் பற்றுவிடாது துறந்ததுபோல ஏமாற்றி
வாழ்பவரைவிட இரக்கமற்றவர் இல்லை.      பாமரன் பொருள்

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்து.      குறள் # 277.
வெளியே குன்றிமணி போல்நல்லவராய் காணப்பட்டாலும் மனம்சிறுத்து அதன்மூக்கு போல் கருத்திருப்பவரும் உண்டு.   பாமரன் பொருள்

மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.   குறள் # 278
மனதில்மாசு இருக்க மாண்புள்ளவர் குளித்துவருபவர்போல
போலியாக நடக்கும் வஞ்சனையாளர் பலர்.      பாமரன் பொருள்

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.     குறள் # 279
நேரான அம்பு கொடியது, வளைந்த யாழ் இனியது அவ்வகையில்
செய்யும் செயலால் மனிதரை உணர்க. (தோற்றத்தால் அல்ல)பாமரன் பொருள்

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.    குறள் # 280.
மொட்டையடித்தலும் சடைவளர்த்தலும் வேண்டாமே, உலகம்
வெறுக்கும் தீச்செயல்களை விட்டுவிட்டால்.  பாமரன் பொருள்

8 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

செய்யும் செயலால் மனிதரை உணர்க. (தோற்றத்தால் அல்ல)

திருக்குறளை அருமையாக பதிவாக்கியதற்குப் பாராட்டுக்கள்..

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்தியற்கு
மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..!

Unknown சொன்னது…

இராஜராஜேஸ்வரி said...
//செய்யும் செயலால் மனிதரை உணர்க. (தோற்றத்தால் அல்ல) திருக்குறளை அருமையாக பதிவாக்கியதற்குப் பாராட்டுக்கள்//
உங்கள் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி.

Unknown சொன்னது…

இராஜராஜேஸ்வரி said...
ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்தியற்கு
மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..

உங்கள் பதிவுகளில் நீங்கள் இணைக்கும் புகைப்படங்களைப் பார்த்து பிரமித்துப் போயிருக்கிறேன் அவ்வளவு படங்கள் அனைத்தும் அருமை. ஆயிரமாவது பதிவிற்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களும் பாராட்டும்.

kowsy சொன்னது…

குறள் கூறும் வாழ்க்கையை மறந்த மனிதர்களுக்கு நினைவு படுத்த உங்கள் பக்கத்தின் பணி பாராட்டுக்குரியது

Unknown சொன்னது…

சந்திரகௌரி said...
//குறள் கூறும் வாழ்க்கையை மறந்த மனிதர்களுக்கு நினைவு படுத்த உங்கள் பக்கத்தின் பணி பாராட்டுக்குரியது//
தங்கள் வருகைக்கும் ஊக்குவிப்பிற்கும் பாராட்டுக்கும் நன்றி

கோமதி அரசு சொன்னது…

மனிதர்களை அவர்கள் செய்யும் செயலால் உணரலாம்,
உண்மை நீங்கள் சொல்வது. இப்போது பணத்தினால் அல்லவா உயர்ந்தவர், தாழ்ந்தவர் உணர்கிறார்கள்.
உங்கள் பணி மகத்தானது.

Unknown சொன்னது…

கோமதி அரசு said...
//மனிதர்களை அவர்கள் செய்யும் செயலால் உணரலாம்,
உண்மை நீங்கள் சொல்வது. இப்போது பணத்தினால் அல்லவா உயர்ந்தவர், தாழ்ந்தவர் உணர்கிறார்கள்...//

தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.