வியாழன், 25 ஜூலை, 2013

கோபத்தை விட்டவர் துறவிக்கு ஒப்பாவார்.



அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்:வெகுளாமை.        (சினங்கொள்ளாமை)
குறள் 306 முதல் 310 வரை



சினம்என்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.               குறள் # 306.
கோபமென்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு சுற்றமெனும்
பாதுகாப்பு தெப்பத்தையும் சுட்டழிக்கும்.            பாமரன் பொருள்



சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.       குறள் # 307
கோபத்தைக் குணமாகக் கொண்டவன் கெடுவது
நிலத்தை அடித்தவன் கை வேதனைக்கு தப்பாதது போல.          பாமரன் பொருள்

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.    குறள் # 308
தீச்சுவாலையுள்ள நெருப்பில் வாட்டுவதுபோன்ற துன்பத்தைச் செய்தவரிடமும் முடியுமானால் கோபம்கொள்ளாமை நல்லது.          பாமரன் பொருள்


உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.     குறள் # 309
நினைத்தத்தை யெல்லாம் உடனே அடைவான் மனதால்
கோபப்பட நினைக்காதவன் என்றால்.                              பாமரன் பொருள்

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.    குறள் # 310.
பெருங்கோபம் கோண்டவர் இறந்தவருக்குச் சமம்ஆவார். கோபத்தை
விட்டவர் துறவிக்கு ஒப்பாவார்.                                               பாமரன் பொருள்

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... தொடர வாழ்த்துக்கள்...

சினமென்னும் - சினம்என்னுஞ்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

தீச்சுவாலையுள்ள நெருப்பில் வாட்டுவதுபோன்ற துன்பத்தைச் செய்தவரிடமும்
முடியுமானால் கோபம்கொள்ளாமை நல்லது.

சிறப்பான குறள் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

Unknown சொன்னது…

Dindiguldhanabal said:
"அருமை... தொடர வாழ்த்துக்கள்...

சினமென்னும் - சினம்என்னுஞ்"

Thank you for your visit and posting a comment. Noted the correction

Unknown சொன்னது…

RajaRajeswari said: தீச்சுவாலையுள்ள நெருப்பில் வாட்டுவதுபோன்ற துன்பத்தைச் செய்தவரிடமும்
முடியுமானால் கோபம்கொள்ளாமை நல்லது.
சிறப்பான குறள் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

Thanks Madam for your visit to my blog and posting a comment.

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.