திங்கள், 22 ஜூலை, 2013

பிறர்பொருளை திருடுவோம் என மனதால் நீனைப்பதும் தீமையானதே



                                                        குறள் 281-285


எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.   குறள் # 281
இகழப்படாமல் வாழவேண்டுபவன் என்பவன் எதனையும்
திருடநினைக்காமல் தன்மனதைக் காக்கவும்.     பாமரன் பொருள்

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.      குறள் # 282
மனதால் நீனைப்பதும் தீமையானதே, பிறர்பொருளை
அவரறியாது திருடுவோம் என்பதை.          பாமரன் பொருள்
 
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.      குறள் # 283.
திருடுவதால் உண்டாகும் பெருக்கம் அளவுக்கதிகமாக
பெருகுவது போலத் தோன்றி அழியும்.        பாமரன் பொருள்
 
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வியா விழுமம் தரும்.         குறள் # 284.
திருடுவதில் ஏற்படும் மிகுந்த ஆசை அதன்விளைவால்
தீராத துன்பத்தைத் தரும்.         பாமரன் பொருள்
 
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்பு பார்ப்பார்கண் இல்.       குறள் # 285
அருள்விரும்பி அன்புடையவராவது, பொருளைத் திருட நினைத்து
ஏமாறும் நிலையை எதிர்பார்ப்பவரிடம் இல்லை.       பாமரன் பொருள்

1 கருத்து:

Unknown சொன்னது…

தயவு செய்து இப்பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். சிரமம் இருப்பின் இப்பதிவின் கீழ் உள்ள contact form மூலமாக எனக்குத் தகவல் தாருங்கள்.

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.