புதன், 17 ஜூலை, 2013

பகைவரை அழித்தலும் நண்பரை உயர்த்தலும் தவப்பயனால் முடியும்.


           அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: தவம்
குறள் 261 முதல் 265 வரை
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.                           குறள் # 261
பெற்ற துன்பத்தைப் பொறுத்தல், உயிர்களுக்கு துன்பம் செய்யாமை
அத்தன்மையதே தவத்தின் வடிவம்.                  பாமரன் பொருள்
 
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது.   குறள் # 262
தவஞ்செய்தலும் நல்வினைசெய்தார்க்கு வரும், வீண் அதனை
தவஒழுக்கமில்லாதவர் மேற்கொள்வது.  பாமரன் பொருள்

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.      குறள் # 263
துறவிகளுக்கு உதவிட வேண்டி மறந்தார்களோ
இல்லறத்தார் தவம் செய்வதை.            பாமரன் பொருள்
 

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.          குறள் # 264
பகைவரை அழித்தலும் நண்பரை உயர்த்தலும்
நினைத்தால் தவத்தின்பயனால் முடியும்.  பாமரன் பொருள்

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.   குறள் # 265
விரும்பியவை விரும்பியவாறு அடைய முடிவதால் தவஞ்செய்தல்
விரைந்து முயன்று செய்யப்படும். பாமரன் பொருள்.
 


2 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

குறள்களும் விளக்கங்களும் மிகவும் அருமை. பராட்டுக்கள் ஐயா.

தங்களுக்கு நேரம் இருந்தால் இன்றைய என் சிறப்புப்பதிவினைக்காண வாருங்கள் ஐயா.

இணைப்பு இதோ:.

http://gopu1949.blogspot.in/2013/08/blog-post.html

அன்புடன் VGK

Unknown சொன்னது…

வை.கோபாலகிருஷ்ணன் said...
//குறள்களும் விளக்கங்களும் மிகவும் அருமை. பராட்டுக்கள் ஐயா. தங்களுக்கு நேரம் இருந்தால் இன்றைய என் சிறப்புப்பதிவினைக்காண வாருங்கள் ஐயா//

உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி. உங்கள் சிறப்புப் பதிவு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.