வெள்ளி, 12 ஜூலை, 2013

அருளாளர் ஆகும் வாய்ப்பில்லைஅறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: புலான்மறுத்தல்.
(குறள் 251 முதல் 255 வரை)
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.     குறள் # 251
தன்உடலை வளர்க்க வேறொரு உயிரின்ஊனை உண்பவன்
எப்படி அருளுடையனாக முடியும்.     பாமரன் பொருள்

பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.    குறள் # 252.
பொருளைஆளுதல் பாதுகாக்காதவர்க்கு இல்லை, அருளாளர்
ஆகும் வாய்ப்பில்லை புலால் உண்பவர்க்கு.     பாமரன் பொருள்

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.   குறள் # 253
ஆயுதம் ஏந்தியவர் நெஞ்சுபோல் நன்மையைநினையாது ஒன்றின்
உடலைச் சுவைபட உண்டவர் மனம்.      பாமரன் பொருள்

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்.   குறள் # 254.
அருளற்றசெயல் என்னவென்றால் கொல்லாமையை சிதைத்தல்
அறமில்லாதது அப்புலாலைத் தின்பது.   பாமரன் பொருள்

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.  குறள் # 255.
(புலால்)உண்ணாமையால் உள்ளன உயிர்கள்.புலால்உண்ண
வாய்திறவாது சகதிக் குழியும்.     பாமரன் பொருள்

1 கருத்து:

Viya Pathy சொன்னது…

Dindigul Dhanabalan
நல்ல விளக்கம்...
அருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. 'பொருளல்லது அவ்வூன்' என மாற்றப்பட்டது நன்றி.

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.