ஞாயிறு, 29 ஜனவரி, 2012

அறவழியில் வருவதே இன்பம்


முதுமையில் செய்யலாமென எண்ணாதுஅறம் செய்க அதுவே
இறுதிக் காலத்தில் துணையாகும்        பாமரன் குறள்
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை               குறள் 36

அறத்தின் பயன் இதுவென கூறவேண்டாம் பல்லக்கில்
பயணிப்பவன் தூக்குபவன் இடையில்                    பாமரன் குறள்
அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை                   குறள் 37

நாள் தவறாமல் அறம் செய்தால் அதுவே
பிறவியைத்  தடுக்கும் கல்                             பாமரன் குறள்
வீழ்நாள் படாஅமை  நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள்  வழியடைக்கும் கல்                           குறள் 38

அறவழியில் வருவதே இன்பம் வேறுவழி வருபவை
இன்பமுமில்லை புகழுமில்லை                பாமரன்   குறள்     அறத்தான் வருவதே இன்பம்மற்று எல்லாம்
புறத்த புகழும் இல                                     குறள்   39    

செய்யவேண்டியவை எல்லாம் அறனே ஒருவருக்கு
செய்யக்கூடாதவை பழிதரும் பாவச்செயல்         பாமரன் குறள்
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி                            குறள் 40

2 கருத்துகள்:

Mahi சொன்னது…

ஐயா,பயனுள்ள வலைப்பூக்கள் நிறைய வைத்திருக்கிறீர்கள் போலிருக்குது! தொடரட்டும் உங்கள் பணி!:)

என் வலைப்பூக்களுக்கு வந்து கருத்துக்கள் பதிந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்!

வியபதி சொன்னது…

தங்கள் வருகைக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.