ஞாயிறு, 22 ஜனவரி, 2012

சிறப்பையும், செல்வத்தையும் தரும் அறம்



சிறப்பைத்தரும் செல்வமும் தரும் அறத்தைவிட
சிறந்தது ஏதும் இல்லை                             பாமரன் குறள்         

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு                                குறள் 31

அறத்தைவிட சிறந்த சக்தியும் இல்லை அதனை
மறப்பதற்கு சமமான கேடும் இல்லை                 பாமரன் குறள்                     

அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்குஇல்லை கேடு                          குறள்  32  

மனதளவில் குற்றமில்லாமல் இருப்பதே அறமாகும்
மற்றவையோ வெறும் ஆரவாரங்களே                பாமரன் குறள்                        

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற                                           குறள் 34

பொறாமை பேராசை கோபம் கடுஞ்சொல் இந்நான்கும்
iஇல்லாது வாழ்வதே அறமாகும்                       பாமரன் குறள்   

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்                                  குறள் 35                    


4 கருத்துகள்:

Angel சொன்னது…

குறளும் அதற்க்கான விளக்கமும் அருமையாக இருக்குங்க

Unknown சொன்னது…

angelin said...
"குறளும் அதற்கான விளக்கமும் அருமையாக இருக்குங்க"

தங்கள் வருகைக்கும், ப்திவிற்கும், ஊக்குவிப்புக்கும் நன்றி

kowsy சொன்னது…

இலகு நடையில் புரியும்படி குறளும் கருத்தும் அருமை

Unknown சொன்னது…

தங்கள் பதிவிற்கும், ஊக்குவிப்புக்கும் நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.